Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

எதையும் சரியாக செய்யல…. மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்…. அதிகாரியின் அதிரடி நடவடிக்கை…!!

சரியாக வேலை பார்க்காத டாஸ்மாக் மேற்பார்வையாளரை அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் உமேஷ் என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சரியான நேரத்தில் வேலைக்கு வருவதில்லை எனவும், பணியை ஒழுங்காக மேற்கொள்வது இல்லை எனவும் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது உமேஷ் வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட அலுவலக பதிவேடுகளை முறையாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதனால் தான் இறந்ததா? அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. வனத்துறையினர் அளித்த தகவல்…!!

கிராம பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை புலியின் உடலை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் எல்லநள்ளி கிராமத்தில் சிறுத்தைப்புலி ஒன்று இறந்து கிடப்பதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தை புலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன்பிறகு வனத்துறையினர் சிறுத்தை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“உடனே வழங்க வேண்டும்” தொழிலாளர்களின் போராட்டம்…. பேச்சுவார்த்தையின் முடிவு….!!

சம்பள பாக்கியை வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர்சோலையில் தனியார் தேயிலை எஸ்டேட் அமைந்துள்ளது. இந்நிலையில் எஸ்டேட் நிர்வாகத்தினர் கடந்த டிசம்பர் மாதம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை இதுவரை கொடுக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாத சம்பள பணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எஸ்டேட் தொழிலாளர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு நியாயம் வேண்டும்” ஆசிரியைகளின் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு…!!

ஆசிரியைகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஹெல்த்கேம்ப் பகுதியில் இருக்கும் வட்டார கல்வி அலுவலகத்திற்கு அரசு உதவி பெறும் ஆசிரியர்கள் சிலர் வந்தனர். இந்நிலையில் அதிகாரிகளிடம் கடந்த ஜனவரி மாதம் சம்பளம் வழங்கப்படவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அப்போது வட்டார கல்வி அலுவலர்கள் அங்கிருந்து சென்றதால் கோபமடைந்த 13 ஆசிரியர்கள் மாத சம்பளத்தை உடனடியாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குட்டிகளுடன் உலா வந்த கரடி…. வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ….!!

கரடிகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வன பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து 2 குட்டிகளுடன் வெளியேறிய கரடி கூக்கல் பகுதிக்குள் நுழைந்து சாலையில் உலா வந்தது. இதனை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தூரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு கரடிகளை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வேகமாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

குடிபோதையில் கீழே விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஒரசோலை காமராஜர் நகரில் கூலித் தொழிலாளியான குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குமரேசன் கோத்தகிரி கடைவீதி பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளார். இதனையடுத்து உழவர் சந்தைக்கு செல்லும் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக குமரேசன் கால் தவறி கீழே விழுந்து இறந்துவிட்டார். மறுநாள் காலை அவ்வழியாக சென்றவர்கள் குமரேசன் இறந்து கிடப்பதை பார்த்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ” ஆபாசமாக மார்பிங் செய்த வாலிபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பகுதியில் 28 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இந்த பெண் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ஒரு நபர் எனது புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து திருமணம் செய்து கொள்ளுமாறு மிரட்டுகிறார். எனவே அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் புகாரில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக்கை….!!

உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்ச ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ஆம் தேதி நடக்க உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை கொண்டு செல்கின்றனரா என கண்காணிப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பறக்கும் படையினர் தீவிர வாகன […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அட்டகாசம் தாங்க முடியல…. கூண்டுக்குள் சிக்கிய குரங்குகள்…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த 24 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவர் சாலை பஜார் பகுதியில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த குரங்குகளை பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் அப்பகுதியில் 2 கூண்டுகளை வைத்தனர். மேலும் கூண்டுகளுக்குள் குரங்குகள் விரும்பி சாப்பிடும் பழங்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூண்டுகளுக்குள் சுமார் 24 குரங்குகள் சிக்கிக் கொண்டது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“இங்கதான் சுத்திட்டு வருது” அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

காட்டு யானைகளுக்கு பொதுமக்கள் தொந்தரவு அளிக்கக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைகள் இடம் பெயர்ந்து வருவது வழக்கம். இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் வளர்ந்துள்ள பசுந்தீவனங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் வருகிறது. கடந்த வாரம் கே.என்.ஆர் நகர் பகுதியில் 5 காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை அடிக்கடி கடந்து செல்கிறது. எனவே வாகன ஓட்டிகள் காட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேகத்தடையில் ஏறி இறங்கிய வாகனம்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள எருமாடு பகுதியில் பெயிண்டரான முருகானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக்கிளில் மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் மாத மங்கலம் பகுதியில் இருக்கும் வேகத்தடையில் ஏறி இறங்கிய போது முருகானந்தத்தின் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த முருகானந்தத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நண்பரை பார்ப்பதற்காக சென்ற வாலிபர்…. திடீரென நடந்த சம்பவம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவர் மீது மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் புவனேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் நண்பரை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இவர் உப்பட்டி வழியாக சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை…. பறக்கும் படையினரின் கண்காணிப்பு பணி…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர், குன்னூர், ஊட்டி, நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் 11 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வாகனங்களில் பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக 45 பறக்கும் படை குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஊட்டி நகராட்சியில் மத்திய பேருந்து நிலையம், ஊட்டி-கோத்தகிரி சாலை சந்திப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து…. நீலகிரியில் பரபரப்பு…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து மலப்புறம் நோக்கி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த லாரி மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அதன்பின் சாலையோர பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டின் பின்புறம் கவிழ்ந்து லாரி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி ஓட்டுனர் உயிர் தப்பிவிட்டார். இதேபோல் கோழிக்கோட்டில் இருந்து மைசூரு நோக்கி புறப்பட்ட லாரி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மீண்டும் புலியின் நடமாட்டம்…. உச்சகட்ட அச்சத்தில் கிராம மக்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

புலி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மசினகுடி பகுதியை சேர்ந்த 2 பேரை புலி கடித்து கொன்றது. அந்த புலியை 23 நாட்கள் போராட்டத்துக்கு பிறகு வனத்துறையினர் பிடித்தனர். இந்நிலையில் மாவனல்லா கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக புலி நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் புலி கால்நடைகளை அடித்து கொன்று வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மலை ரயில் பாதையில் உலா வரும் யானை…. அச்சத்தில் ரயில்வே ஊழியர்கள்….!!

யானை தனது குட்டியுடன் மலை ரயில் பாதையில் சுற்றி திரிகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பர்லியார் பகுதியில் கடந்த வாரம் குட்டியுடன் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. அந்த கூட்டத்திலிருந்து பெண் காட்டு யானை தனது ஒரு மாத குட்டியுடன் பிரிந்தது. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ்-ரன்னிமேடு இடையே காட்டு யானை தனது குட்டியுடன் சுற்றித் திரிகிறது. இந்த காட்டு யானை குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்துவதால் ரயில்வே ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“என் லட்சியமே இதுதான்” முதலிடம் பிடித்த மாணவியின் பேட்டி…!!

வேளாண் அதிகாரி ஆவதே லட்சியம் என தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மாணவி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மெயின் பஜாரில் நாகராஜ்-பூவிழி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூர்வா ஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் கோத்தகிரியில் இருக்கும் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்தார். இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் பூர்வா ஸ்ரீ முதலிடம் பிடித்துள்ளார் . இதுகுறித்து மாணவி கூறும்போது, நான் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

குளிப்பதற்காக சென்ற மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள அருவங்காடு பகுதியில் ஜீவா-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாலினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலினி ஆன்லைன் மூலம் வகுப்பில் கவனம் செலுத்தி கொண்டிருந்தார். இதனையடுத்து குளிப்பதற்காக சென்ற மாலினி நீண்ட நேரமாகியும் குளியலறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஜீவா கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கொஞ்சம் வண்டியை நிப்பாட்டுங்க” கடுங்குளிரில் சிரமப்பட்ட வாகன ஓட்டிகள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

காட்டு யானை சாலையின் குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கீழ்தட்டபள்ளம் பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டத்தில் கடந்த சில மாதங்களாக காட்டு யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இந்நிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானை உலா வந்ததை பார்த்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்த படி சாலையின் குறுக்கே நின்றது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய சரக்கு லாரி…. அலறிய பயணிகள்…. நீலகிரியில் பரபரப்பு…!!

அரசு பேருந்து மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று ஊட்டி நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த பேருந்து பைக்காரா பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஊட்டியில் இருந்து நடுவட்டம் நோக்கி வந்த சரக்கு லாரி அரசு பேருந்தின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இதுகுறித்து தகவல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“எல்லாமே வந்து போகுது ” பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

குடியிருப்பு பகுதியில் வன விலங்குகள் நடமாடுவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் அருகில் இருக்கும் கரிமரா அட்டி குடியிருப்பு பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் 3 கரடிகள் மற்றும் 2 சிறுத்தை புலிகள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் சாலைகளில் உலா வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது சில நேரங்களில் மட்டுமே வனவிலங்குகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் பற்றி எரிந்த தீ…. 2 மணி நேர போராட்டம்…. வனத்துறையினரின் முயற்சி…!!

வனப்பகுதியில் பற்றி எரிந்த தீ 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏலமன்னாவில் இருக்கும் சாலையோரத்தில் அடர்ந்த வனப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் வனப் பகுதியில் இருக்கும் காய்ந்து போன புற்களில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அப்பகுதியில் காற்று பலமாக வீசியதால் தீ அனைத்து இடங்களுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 மணி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வியாபாரியை மிரட்டிய நபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கத்தியை காட்டி மிரட்டி வியாபாரியிடம் இருந்து பணம் மற்றும் நகையை பறித்து சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கார்சிலி பகுதியில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோத்தகிரி பேருந்து நிலைய பகுதியில் பெட்டி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் பாலச்சந்திரன் தனது கடைக்கு நடந்து சென்றபோது மர்ம நபர் அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அதன்பிறகு அந்த மர்மநபர் கத்தியை காட்டி மிரட்டி பாலச்சந்திரனிடம் இருந்த 500 ரூபாய் பணம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“சூப்பரா பாலீஷ் போடுவோம்” பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பாலீஷ் போடுவதாக ஏமாற்றி தங்க நகைகளை திருடி சென்ற வடமாநில நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கக்குச்சி கிராமத்தில் ராஜ்குமார்-நளினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நளினி வீட்டில் தனியாக இருந்த போது 2 வடமாநில நபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து தங்க நகைகளை பாலிஷ் செய்து தருவதாக கூறி அந்த நபர்கள் நளினியிடம் இருந்து 5 1/2 பவுன் தங்க நகைகளை வாங்கியுள்ளனர். அதன்பின் பாலீஷ் செய்வதற்கு வெந்நீர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அத்துமீறி நுழைந்த மதபோதகர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக மத போதகர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்திலுள்ள பிங்கர் போஸ்ட் பகுதியில் மத போதகரான ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஸ்டீபன் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கொடிய விஷமுடையது…. பிடிபட்ட 2 நாகப்பாம்புகள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

2 நாகப்பாம்புகளை வனத்துறையினர் பத்திரமாக பிடித்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெட்டுகாடு பகுதியில் இருக்கும் சாலையில் இரண்டு நாகப்பாம்புகள் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சுமார் 6 அடி நீளமுடைய 2 நாக பாம்புகளையும் பத்திரமாக பிடித்துவிட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது பிடிபட்ட பாம்பு அதிக விஷத்தன்மை உடையது என தெரிவித்துள்ளனர். அதன்பிறகு வனத்துறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதை பயன்படுத்தக்கூடாது…. அதிகாரிகளின் திடீர் சோதனை…. உரிமையாளர்களுக்கு அபராதம்…!!

விற்பனைக்காக வைத்திருந்த 5 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊட்டி கமர்சியல் சாலையில் இருக்கும் கடைகளில் நகராட்சி நகர் நல அலுவலர் ஸ்ரீதர் மற்றும் சுகாதார அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனைக்கு வைத்திருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து 5 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அம்மு”- வின் குறும்புத்தனம்…. பாசமாக பழகும் குட்டியானை…. ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…!!

பாகன்களுடன் பாசமாக பழகும் குட்டி யானையின் குறும்புத்தனத்தை சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இந்நிலையில் அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து முகாமில் வைத்து பயிற்சி அளித்து அதனை வனத்துறையினர் கும்கியாக மாற்றுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் வனப்பகுதியில் பிறந்து 20 நாட்களே ஆன குட்டி யானை தாயை பிரிந்து தவித்தது. இந்த குட்டி யானையை வனத்துறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒரே இடத்தில் 5-வது முறையாக விபத்து…. நடுரோட்டில் கவிழ்ந்த லாரி…. நீலகிரியில் பரபரப்பு…!!

ஒரே இடத்தில் 5-வது முறையாக சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நாடுகாணியிலிருந்து கேரளா எல்லையான வழிக்கடவு வரை அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. கடந்த 2 வாரங்களாக சரக்கு லாரிகள் பள்ளத்தில் கவிழ்ந்து வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து வந்த சரக்கு லாரி நாடுகாணியில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, நாடுகாணியில் ஒரே இடத்தில் 5-வது முறையாக சரக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் கேட்ட பயங்கர சத்தம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய குடும்பத்தினர்…. அதிகாரிகளின் நேரடி ஆய்வு…!!

வீட்டின் மேற்கூரை இடிந்த விபத்தில் கூலி தொழிலாளியின் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி பகுதியில் கூலி தொழிலாளியான ஸ்ரீதேவன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் உணவு சாப்பிட்டுவிட்டு ஸ்ரீதேவன் தனது குடும்பத்தினருடன் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென ஸ்ரீதேவனின் வீட்டு முன் பக்க அறையின் மேற்கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்துவிட்டது. அந்த சமயம் ஸ்ரீதேவனின் குடும்பத்தினர் மற்றொரு அறையில் தூங்கி கொண்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அந்தரத்தில் தொங்கும் பாறை…. அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

அபாயகரமாக அந்தரத்தில் தொங்கும் பாறைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மலையை குடைந்து அமைக்கப்பட்ட பாதையாகும். இங்கு மழை காலத்தில் பாறைகள் உருண்டு விழுதல், மரங்கள் முறிந்து விழுதல் போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறும். இந்நிலையில் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சில இடங்களில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாட்டிலுக்குள் சிக்கிய தலை…. பத்திரமாக மீட்கப்பட்ட சிறுத்தை பூனை…. வனத்துறையினரின் முயற்சி…!!

பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலை சிக்கியதால் சிரமப்பட்ட சிறுத்தை பூனையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சின்காராவில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேயிலை தோட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டிலுக்குள் தலை சிக்கிய நிலையில் சிறுத்தை பூனை ஒன்று தவித்துக்கொண்டிருந்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தை பூனையை பிடித்து பிளாஸ்டிக் பாட்டிலை அகற்றிவிட்டனர். அதன் பிறகு வனத்துறையினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அலங்கரிக்கப்பட்ட வளர்ப்பு யானைகள்…. முகாமில் பொங்கல் கொண்டாட்டம்…. சுற்றுலா பயணிகளின் வருகை….!!

முதுமலை முகாமில் பராமரிக்கப்படும் யானைகளுக்கு மாலை அணிவித்து, சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள், காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. முதுமலை தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதுமலை தெப்பக்காடு முகாமில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது. இதனால் பாகன்கள் யானைகளை குளிப்பாட்டி, சந்தனம், குங்குமம் இட்டு அலங்கரித்துள்ளனர். அதன்பிறகு முகாமில் யானைகள் சமூக இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டன. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொட்டியிலிருந்து கேட்ட உறுமல் சத்தம்…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் முயற்சி…!!

15 அடி ஆழ தொட்டிக்குள் விழுந்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன . இந்நிலையில் கூடலூர் சில்வர் கிளவுட் தனியார் எஸ்டேட் 2-வது டிவிஷன் பகுதியில் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த 15 அடி தொட்டிக்குள் உறுமல் சத்தம் வருவதை கேட்ட தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது தொட்டிக்குள் சிறுத்தை ஒன்று கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு…. அவலாஞ்சியில் பதிவாகிய வெப்பநிலை….!!

அவலாஞ்சியில் -1 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் உறைபனி தாக்கம் தொடங்கியுள்ளது. இதனால் தென்மாநிலங்களின் குளிர்பிரதேசம் என்று அழைக்கப்படும் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் அடர்ந்த வனப்பகுதியான அவலாஞ்சியில் உறைபனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் அவலாஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. நேற்று அவலாஞ்சியில் -1 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய மினி வேன்…. சாலையில் கவிழ்ந்து விபத்து…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து….!!

கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து பலவகை பொருட்களை ஏற்றிக்கொண்டு மினி வேன் ஒன்று கூடலூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நடுவட்டம் அருகில் உள்ள டி.ஆர் பஜார் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மினி வேன் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரகசியமாக நடந்த விசாரணை…. கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

போதை பொருட்கள் வைத்திருந்த குற்றத்திற்காக கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள நிலம்பூரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் நாடுகாணியிலிருந்து நிலம்பூர் நோக்கி வேகமாக சென்ற ஒரு காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை காரில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கார் டிரைவர் அன்ஷாத், முர்ஷித், ராஷித் ஆகிய […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அரியவகை நீர்நாய்கள்” கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்…. வன உயிரின ஆர்வலர்களின் கருத்து….!!

அரிய வகை நீர் நாயை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் மசினகுடி ஆறுகளில் அரியவகை நீர் நாய்கள் சுற்றி திரிகிறது. இவை மாலை நேரத்தில் கூட்டம் கூட்டமாக நின்று விளையாடி கொண்டிருக்கிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இதுகுறித்து வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, நீர்நாய் ஒரு பாலூட்டி விலங்காகும். இவை பசிபிக், அட்லாண்டிக் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“200 கிலோவாக அதிகரிச்சிருக்கு” 4 பேரை கொன்ற புலி…. அதிகாரியின் நேரடி ஆய்வு…!!

வனவிலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு தலைமை வன உயிரின பாதுகாவலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நீலகிரி மாவட்டத்திலுள்ள மசினகுடி மற்றும் கூடலூர் பகுதியில் கடந்த ஆண்டு புலி ஒன்று 4 பேரை கடித்து கொன்றது. கடந்த அக்டோபர் மாதம் 21-ஆம் தேதி வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி அட்டகாசம் செய்த புலியை பிடித்து விட்டனர். இதனையடுத்து காயங்களுடன் இருந்த அந்த புலியை கூண்டுக்குள் அடைத்து மைசூரு வன விலங்கு மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

10 நாட்களில் 1 லட்சம் சுற்றுலா பயணிகளா….? வெளியான தகவல்கள்….!!

 ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு 10 நாட்களில் 1 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தோட்டக்கலை பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். இதனையடுத்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பைக்காரா மற்றும் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடம்…. ஆர்வத்துடன் செல்லும் சுற்றுலா பயணிகள்….!!

ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நஞ்சப்பசத்திரம் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமான படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் விபத்து நடந்த இடத்தை இராணுவத்தினரும், காவல்துறையினரும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அந்த பகுதிக்குள் பொதுமக்கள் நுழையாதவாறு சீல் வைத்தனர். இந்நிலையில் ஹெலிகாப்டரின் எஞ்சின் போன்ற ராட்சத பாகங்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

2 திருமணங்கள் செய்த ஊழியர்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் தனியார் நிறுவன ஊழியரான குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு குமார் ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டு குமார் சந்திரா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். அவரும் சில ஆண்டுகளில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அம்மா என்னை மன்னித்து விடு” மாணவியின் உருக்கமான கடிதம்…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பாரதி நகரில் அருளானந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகளான ஜெயா கூடலூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துள்ளார். இந்நிலையில் டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்தில் இருந்த ஜெயா நீட் தேர்வில் 69 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் ஜெயாவை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

திரும்ப முடியாமல் நின்ற லாரி…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. நீலகிரியில் பரபரப்பு…!!

கனரக லாரி சாலையின் குறுக்கே நின்றதால் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியிலிருந்து லோடு ஏற்றிய கனரக லாரி வெலிங்டனுக்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் குடுமனை பகுதியில் இருக்கும் குறுகிய வளைவில் ஓட்டுநர் லாரியை திருப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் திரும்ப முடியாமல் லாரி சாலையோர தடுப்பு சுவரில் மோதி குறுக்கே நின்றதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றுள்ளது. மேலும் அந்த இடத்தில் ஒன்னதலை ஹெத்தையம்மன் கோவில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

30 அடி உயரத்திற்கு பீய்ச்சி அடித்த தண்ணீர்…. சாலையில் ஏற்பட்ட விரிசல்…. தீவிரமாக நடைபெறும் பணி…!!

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் நகருக்கு எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்காக எமரால்டு அணையிலிருந்து பெரிய குழாய்கள் சாலையின் அடிப்பகுதியில் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எமரால்டு பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு அழுத்தம் ஏற்பட்டதால் சுமார் 30 அடி உயரத்திற்கு மேல் தண்ணீர் பீய்ச்சி அடித்து வீணாகியுள்ளது. மேலும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தாறுமாறாக ஓடிய லாரி…. சாலையில் கவிழ்ந்து விபத்து…. அதிஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநரும், கிளீனரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் இருந்து காய்கறி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கூடலூர் நோக்கி மினி லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. இந்நிலையில் மினி லாரி மேல் கூடலூர் கிறிஸ்தவ ஆலயம் முன்பு சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தாறுமாறாக ஓடிய மினி லாரி சாலையோரம் வீடுகள் இருந்த பகுதியில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சரவணன், கிளீனர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இரவில் சுற்றித்திரியும் கரடிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

கரடி குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரிந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கரடியின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி அங்குள்ள கிறிஸ்தவ ஆலயம் அருகில் இருக்கும் சாலையில் சுற்றித் திரிந்தது. இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்தக் கரடி சுமார் ஒரு மணிநேரம் அங்குமிங்கும் சுற்றித்திரிந்த பிறகு வனப்பகுதிக்குள் சென்றது. இதனையடுத்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறையிலிருந்த கைதி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சிறையிலிருந்த கைதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் பகுதியில் தம்பி ராதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தம்பி ராதாவை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தம்பியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்த ஒரு மரத்தில் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வழிதவறி வந்த சிறுத்தை பூனை குட்டி…. கடை உரிமையாளர் அளித்த தகவல்…. தீயணைப்பு துறையினரின் முயற்சி….!!

கடைக்குள் புகுந்த சிறுத்தை பூனை குட்டியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றி உள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் சிறுத்தை பூனைக்குட்டி ஒன்று வழி தவறி குன்னூர் நகருக்குள் நுழைந்து அங்கும் இங்கும் நடமாடியது. அதன் பிறகு சிறுத்தை பூனை குட்டி அங்கிருந்த கடைக்குள் புகுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் உடனடியாக தீயணைப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கண்பார்வையில் முன்னேற்றம்…. சேரனுக்கு தொடர்ந்து அளிக்கப்படும் சிகிச்சை…. வனத்துறையினரின் தகவல்…!!

வளர்ப்பு யானை சேரனின் கண்பார்வையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள தெப்பக்காடு முகாமில் ஸ்ரீனிவாசன், பொம்மன், சேரன் உட்பட 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்படுகிறது. ஊருக்குள் அட்டகாசம் செய்த இந்த காட்டு யானைகளை பிடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் பாகன்கள் ஈடுபடும் போது சில யானைகள் முரண்டு பிடிக்கிறது. கடந்த மே மாதம் பாகன் ஒருவர் வளர்ப்பு யானை சேரனை தாக்கியதால் அதன் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |