முதல்வரை அபண்டமாக குற்றம் சாட்டுவது ஸ்டாலினின் அரைவேக்காட்டு தனத்தை காட்டுகின்றது என்று அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். ஏன் இவ்வளவு நாட்களாக […]
