நிலத்திற்குள் மழை நீர் புகுந்ததால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்படுவதால் விவசாயிகள் வருத்தத்தில் இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் உள்பட 10-க்கும் அதிகமான கிராமங்களில் விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான விளைநிலங்களில் சம்பா நெல் சாகுபடி செய்து அதனை பராமரித்து வந்தனர். இந்நிலையில் இதனுடன் மணிலா மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அதன்பின் மழை பெய்ததால் கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த விளை நிலங்களுக்குள் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கி நின்றுள்ளது. இதனால் கவலையடைந்த […]
