நிலக்கரி சுரங்கத்தில் மண்சரிவு ஏற்பட்டதினால் ராட்சச எந்திரன் சாய்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனம் இயங்கி வருகின்றது. இங்கு இருக்கின்ற 3 சுரங்கங்களிலிருந்து வெட்டப்படும் நிலக்கரியை கொண்டு அனல்மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நிறுவனத்தின் தேவைக்கு போக நிலக்கரியும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனையடுத்து சுரங்கங்களில் நிலக்கரி எடுக்க மேல் மண் எடுக்கும் பணியின் போது சேகரிக்கப்படும் மண்ணை ஏற்கனவே நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு […]
