தொடர் கனமழையால் அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பதை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி செய்யப்படுகின்ற நீராதாரங்களை ஆதாரமாக வைத்து அமராவதி அணை கட்டப்பட்டிருக்கிறது. இதில் கேரளா மற்றும் தமிழகம் ஆகிய மாநில வனப்பகுதியில் உற்பத்தி ஆகின்ற தேனாறு உள்பட 4 ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அழித்து வருகின்றது. இதனை ஆதாரமாக வைத்து கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. […]
