அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடுவதினால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தீவிர கனமழை பெய்து வருகின்றது. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதில் இரண்டு அணைகளில் இருந்தும் கூடுதலாக தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒகேனக்கல்லுக்கு […]
