நைஜர் நாட்டில் அகதிகளுக்கு உணவு வழங்கும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மிதிபட்டு பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியா மற்றும் சாட் நாடுகளின் எல்லையோரத்தில் இருக்கிறது நைஜர் நாட்டின் டிஃபா நகரம். இந்த நகரத்தில் போக்கோ ஹரம் தீவிரவாதிகள் அடிக்கடி நடத்தும் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நைஜீரிய அகதிகள், சொந்த நாட்டிலுள்ள வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளவர்கள் உள்ளிட்ட 2, 50,000-த்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்தநிலையில் அங்கே இருக்கின்ற […]
