மங்களூர் நகரில் கடந்த சனிக்கிழமை அன்று 19ஆம் தேதி நடைபெற்ற ஆட்டோ வெடிகுண்டு சம்பவத்த்தை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க தற்போது அதிகாரப்பூர்வமாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற பிறகு இந்த ஆட்டோவில் பயணித்த பயணியான ஷாரிக் என்பவர் தான் தீவிரவாதி எனவும், அவர்தான் குக்கர் குண்டு எடுத்துச் சென்று வெடிக்க முயற்சித்ததாக கர்நாடக காவல்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையின் அடிப்படையில் தெரிவித்தார்கள். குற்றவாளி இவன்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்ட […]
