பிரித்தானியாவில் மருத்துவமனைகள் மூடப்படும் அபாய நிலையில் உள்ளதாக NHS தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவையின் வழங்குநர்களின் (NHS Providers) தலைமை நிர்வாகி கிறிஸ் ஹாப்சன் குறிப்பிட்ட ஒரு மருத்துவமனையை சுட்டிக்காட்டி அங்கு கிட்டத்தட்ட 40 மகப்பேறு உதவியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள மறுப்பு தெரிவித்துவிட்டனர் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக அந்த மகப்பேறு பிரிவு மூடப்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோலவே பிரித்தானியாவில் பல மருத்துவமனைகளிலும் ஊழியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் […]
