ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக மாநகர் முழுவதும் 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாளை நள்ளிரவு ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பையொட்டி மெரினா கடற்கரை, கிழக்குக் கடற்கரைச் சாலை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவர். எனவே, பாதுகாப்புப் பணியில் சுமார் 15 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பல்வேறு பாதுகாப்புப் பணிகளிலும் காவல்துறை ஈடுபட்டுள்ளது.குறிப்பாக, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு, கீழ்ப்பாக்கம், புளியந்தோப்பு, அயனாவரம் உள்ளிட்ட 368 இடங்களில், காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளனர். வழிபாட்டு […]
