திருமணமான 16 நாளில் புதுப்பெண் மரணமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ரகுபதி இவர் அப்பகுதியில்இருக்கும் காற்றாலை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 30ஆம் தேதி ரகுபதிக்கும் பொள்ளாச்சி அருகே இருக்கும் ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த ராமசாமியின் மகள் தீபாவிற்கும் உடுமலையில் வைத்து திருமணம் நடந்தது. தீபா கணவர் ரகுபதியுடன் விளாமரத்துபட்டியில் வசித்து வந்தார். திடீரென தீபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தீபாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார் ரகுபதி. […]
