அதிபர் விளாதிமிர் புதினின் உத்தரவின் பேரில் ரஷ்ய பிரதமர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய பிரதமராக மைக்கல் மிஷுதின் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய அரசியலில் திடீர் திருப்பமாக அந்நாட்டு அரசு கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது. பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் உட்பட அனைத்து அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை அதிபர் விளாதிமிர் புதினிடம் ஒப்படைத்தனர். இந்த திடீர் திருப்பம் அதிபர் புதினின் உத்தரவின் பேரில்தான் அரங்கேறியுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருபது […]
