Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் புதிதாக 228 பேருக்கு கொரோனா – மேலும் ஊரடங்கு நீட்டிப்பா ?

குஜராத்தில புதிதாக 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஊரடங்கு நீடிக்குமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,067 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிற்கு  இதுவரை நாடு முழுவதும் 527 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கின்ற நிலையில் மகராஷ்டிராவில் 3,648 பேருக்கும், டெல்லியில் 1,893 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய பிரதேசத்தில் 1,402 பேருக்கும், தமிழகத்தில் 1,372 பேருக்கும் கொரோனா  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் மகனா? சகோதரானா? பயங்கரவாதியா ? மக்கள் முடிவு செய்வர்கள் – கெஜ்ரிவால்

சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் நான் அவர்களின் மகனா? அல்லது பயங்கரவாதியா? என்று முடிவு செய்வார்கள் என அம்மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல் : பாஜக நட்சத்திர பேச்சாளர்களுக்கு தடை ….!!

சர்ச்சை கருத்து தெரிவித்த பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்களான அனுராக் தாகூர், பர்வேஷ் வெர்மா ஆகியோருக்கு பரப்புரையில் ஈடுபட தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 10ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பல அரசியல் கட்சியினர் தேர்தல் பரப்புரையின்போது விதிகளை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் – காங். வலியுறுத்தல்

வரும் நிடுநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரும், முன்னாள் மகாராஷ்டிர முதலமைச்சருமான பிரித்விராஜ் சவான் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “2022ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும் என்று பாஜக வாக்குறுதியளித்துள்ளது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இது தொடர்பாக அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயர வேண்டுமெனில் அத்துறையின் ஆண்டு வருமானம் […]

Categories
உலக செய்திகள்

எங்களை கேட்குறீங்களா ? பாயும் இந்தியா…. அசிங்கபடும் ஐரோப்பியா …!!

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் செயல்படக் கூடாது என இந்திய உயர்மட்ட அலுவலர்கள் அறிவுறுத்துகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற அதன் உறுப்பினர்கள் சிலர் முயன்றுவருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னையாகும். அதுமட்டுமல்லாமல் இச்சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிலும் சட்டப்பூர்வமாகவும், ஜனநாயக முறையிலும் நிறைவேறியுள்ளது. இந்தச் சட்டம் யாரையும் வஞ்சிக்கும் நோக்கில் கொண்டுவரப்படவில்லை. இதேபோன்ற […]

Categories
தேசிய செய்திகள்

‘சிஏஏவுக்கு எதிராகப் போராட பணம் வாங்கினேனா?’ – மூத்த வழக்கறிஞர் ஆவேசம்

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்க தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிடம் பணம் பெறவில்லை என்று மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கூறியுள்ளார். சமீபத்தில், நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டு கடும் விமர்சனத்துக்குள்ளானவர் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங். ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளை சோனியா காந்தி மன்னித்ததை மேற்கோள் காட்டிய அவர், அதேபோல் நிர்பயா தாயார் ஆஷா தேவியும் குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு ஆஷா […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி தேர்தல்: ஹேமா மாலினி, காம்பீர் என நட்சத்திரங்களைக் களமிறக்கிய பாஜக

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கும் நட்சத்திர பரப்புரையாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. டெல்லியில் தற்போதைய அரசின் ஆட்சிக்காலம் முடியப்போவதால், அங்கு பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அறிவித்த நாள் முதலே டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். தேசியக் கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”நீங்க லோக்கல பாருங்க போதும்”…. பாண்டியாவுக்கு பிசிசிஐ ஆலோசனை …!!

உடல்தகுதி சோதனையில் தோல்வியடைந்ததையடுத்து, உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்துமாறு இந்திய வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு பிசிசிஐ ஆலோசனை வழங்கியுள்ளது. இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படவில்லை. அதற்கு உடல்தகுதி சோதனையில் தோல்வியடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், சில நாள்களுக்கு முன்னதாக ஹர்திக், உடல்தகுதி சோதனையில் தன்னால் எளிதாக வெற்றிபெற முடியும் எனக் கூறியிருந்ததால், தற்போது இந்தச் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் பேசுகையில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”இலவச கல்வி ,மின்சாரம், குடிநீர்” மாஸ் காட்டும் தேர்தல் அறிக்கை …!!

இலவச கல்வி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட 10 அம்ச உறுதித்திட்டத்தை தனது தேர்தல் அறிக்கையாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். வரும் பிப்ரவரி 8ஆம் தேதி டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநில முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார். கெஜ்ரிவாலின் உறுதித் திட்டம் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில், தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவற்றை நிறைவேற்றுவேன் எனக் கூறி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

எந்த ஆதாரமுமின்றி கைதுசெய்வதா? ப. சிதம்பரம் ஆதங்கம் ….!!

சமூக செயற்பாட்டாளர் சதாப் ஜாபர், முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி, பிரவீன் ராவ் ஆகியோர் எவ்வித ஆதாரமுமின்றி கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தனது ஆதங்கத்தை ப. சிதம்பரம் வெளிப்படுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் சதாப் ஜாபர், முன்னாள் ஐ.பி.எஸ். அலுவலர் எஸ்.ஆர். தாராபுரி, பிரவீன் ராவ் ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியபோது கைதுசெய்யப்பட்டனர். தற்போது அவர்கள் நிபந்தனை பிணையில் வெளியே வந்துள்ளனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்தத் தலைவரும், […]

Categories
தேசிய செய்திகள்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் டெல்லி….. அவதியில் பொதுமக்கள்……..!!!!

டெல்லியில் போராட்டம் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட்டுள்ளது.   புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து நாடு எங்கிலும் பல்வேறு போராட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. குறிப்பாக அசாம், டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கமாநிலத்தின் சில இடங்களில் இதுவரை இச்சட்டம் மீது வன்முறை சீற்றத்தைக் ஏற்பட்டுள்ளன. மேலும்,வியாழக்கிழமை அன்று  திருத்தப்பட்ட சட்டத்திற்கு எதிராக பீகாரில் இடதுசாரி கட்சிகள் சார்பாக முழு அடைப்பு அறிவித்துள்ளன, மும்பை மற்றும் நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தீவிரமடைந்த போராட்டம்: அரசு பேருந்துக்கு தீ வைப்பு- ரெயில் நிலையங்கள் மூடல்…!!

திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளதால் அரசு பஸ்களுக்கு  தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் வெடித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இன்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியிலும்  போராட்டம்  தீவிரமடைந்துள்ளது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக டெல்லியில் அமைந்துள்ள பாரத் நகர் என்ற பகுதியில் இன்று மாலை அரசு பஸ்களுக்கு தீ வைத்து  எரிக்கப்பட்டது. மேலும், […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

மெட்ரோவில் பாய்ந்த கணவன்… குழந்தையை கொன்ற மனைவி… டெல்லியில் சோகம்..!!

டெல்லியில்  தமிழகத்தை சேர்ந்த நபர் மெட்ரோ ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் குழந்தையை கொன்ற அவரது மனைவி தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் . சென்னையை அடுத்து நொலம்பூர் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், டெல்லியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார் .குழந்தை ,மனைவி மற்றும் தம்பியுடன் நொய்டாவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து  வந்த அவர் டெல்லி ஜவகர்லால் நேரு  மெட்ரோ ரயில் நிலையத்தில் ஓடும் […]

Categories
தேசிய செய்திகள்

தவறான மருந்தால் 2 வயது குழந்தை இறப்பு…!!டெல்லியில் சோகம்…!!

டெல்லியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 வயது குழந்தைக்கு அளிக்கப்பட்ட தவறான மருந்தினால்  ரத்த வாந்தி எடுத்து அக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. டெல்லியின் சதாரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரின் 2 வயது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்துள்ளது.  இதையடுத்து அந்த பெண் மருந்தை  மெடிக்கல் ஷாப்பிலிருந்து வாங்கி கொடுத்துள்ளார். ஆனாலும் குழந்தையின்  உடல்நலம் சரியாகவில்லை.இதனால் மீண்டும் மெடிக்கல் ஷாப் முதலாளி அக்குழந்தைக்கு காய்ச்சல் குணமாக கடந்த வியாழக்கிழமை (december 12) ஆம் தேதி ஊசி போட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளை தூக்கில் போட திகார் ஜெயில் தீவிரம் காட்டி வருகிறது …!!

நிர்பயா  பலாத்கார வழக்கில் குற்றம் செய்யப் பட்ட 4போரையும் திகார் ஜெயிலில் தூக்கில் போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .   டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் வைத்து மாணவி நிர்பயா  6பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ்  ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.  இவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள் மாநில செய்திகள்

ஜான்சி சாலையில் உள்ள தொழிலகத்தில் நடந்த தீவிபத்தில் 43பேர் பலி …!!

டெல்லியில் ராணி ஜான்சி சாலையில்உள்ள தொழிலகத்தில் தீவிபத்து ஏற்பட்டதில் 43பேர் இறந்துள்ளனர் .50கும் மேற்பட்டோர் தீயணைப்பு துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளனர் .   தலைநகர் டெல்லியில் ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டியில் சந்தை பகுதி ஒன்று உள்ளது .அங்கு ஆறு அடுக்குமாடி கட்டிடத்தில்  தொழிலகம் ஒன்று இயங்கி வருவதாக கூறப்படுகிறது .இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதே கட்டிடத்தில் தங்கியுள்ளனர் .இந்த ஆறு மாடி கட்டிடத்தில் இன்று அதிகாலை ஐந்து மணிக்குமேல் தீவிபத்து ஏற்பட்டுள்ளது .இதையடுத்து […]

Categories

Tech |