கர்நாடகா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பின்னர் 18 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்னும் 16 அமைச்சர்கள் இடம் காலியாக உள்ளன. அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ஆசையில் இருந்த பாஜக_வினர் பலர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து […]
