நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தேசிய மாணவர் படை அலுவலகத்தில் அரசு ஊழியராக பணிபுரிந்து வந்தவர் வித்யா. வித்யாவின் முதல் கணவன் விபத்தில் இறந்ததை தொடர்ந்து இரண்டாவதாக நாங்குநேரி அருகிலுள்ள முதலை குலத்தைச் சேர்ந்த ஆறுமுகநயினார்க்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வித்யா மற்றும் ஆறுமுகநயினார்க்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதையடுத்து தாயின் வீட்டில் இருந்து குழந்தையை பராமரித்து வந்துள்ளார் வித்யா. குழந்தையை பார்க்க அவ்வப்போது மனைவியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார் ஆறுமுகநயினார். […]
