பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு தகுதி பெறுவதற்கும், மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி உதவி தொகையை பெறுவதற்கும் நெட் தேர்வில் தகுதி பெறுவது அவசியமாகும். இந்நிலையில் நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 12, 13, 14 தேதிகளில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட நெட் தேர்வு, செப்டம்பர் 20 -30 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
