நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் துணிசிரமேடு உள்பட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களில் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளது. இதனால் விவசாயிகள் அனைவரும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். எனவே மழையால் சேதமடைந்த நெல் வயல்களை அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் […]
