தொடர்ந்து பெய்த கனமழையால் தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் அனைவரும் வருத்தத்தில் இருக்கின்றனர். கடலூர் மாவட்டத்தில் இருக்கும் 200-க்கும் அதிகமான கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கின்றது. ஆனால் கடந்த சில தினங்களாக இம்மாவட்டத்தில் இடி, மின்னலுடன் பெய்த தொடர் கனமழையால் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்து மழைநீரில் […]
