ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ஒரே நாளில் 74 லட்ச ரூபாய்க்கு தானியங்கள் விற்பனையாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூரில் செயல்பட்டு வருகின்ற தமிழக அரசின் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கடந்த ஒரு வார காலமாக நெல் வரத்து தொடங்கி இருக்கின்ற நிலையில் தற்போது ஒரே நாளில் 5000 மூட்டை வந்துள்ளது. இவற்றின் குறைந்தபட்ச விலையாக 980 ரூபாயும், அதிகபட்சமாக 1,480 ரூபாயுமாக இருந்துள்ளது. இதனையடுத்து எல்.இ.டி. 37 ரக நெல்லுக்கு குறைந்தபட்சம் 980 […]
