தேவையான பொருட்கள்: சுக்கு – சிறிய துண்டு ஓமம் – 1 ஸ்பூன் திப்பிலி – 1 பெருங்காயம் – 1/4 ஸ்பூன் வேப்பங்கொட்டை – 1 செய்முறை : முதலில் மேலே கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இவைகளை மாவாக அரைத்து , வெந்நீரில் கலந்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய நீரை , குழந்தைகளுக்கு கொடுத்து வர சளி அத்தனையும் வெளியேறி விடுகிறது .
