இந்தியா பாகிஸ்தான் இடையே போா் ஏற்பட்டால் இந்திய ராணுவத்தினா் பாகிஸ்தானை தோற்கடிக்க 10 நாள்களே போதும் என்று இந்திய பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். தில்லியில் செவ்வாய்க்கிழமை தேசிய மாணவா் படையின் (என்சிசி) வருடாந்திர பேரணி நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பேசியதாவது: அண்டை நாடுகளில் வசித்து வரும் சிறுபான்மை மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதியைத் திருத்தவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு இயற்றியதாகவும் அவா் கூறினாா். நம் நாட்டில் பல ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் […]
