போதைப்பொருள் பதுக்கிய குற்றத்தில் 5 இந்தியர்கள் உட்பட 4 நாடுகளைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின், தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ஆஸ்திரேலிய நாட்டின் அதிகாரிகளுடன் சேர்ந்து அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில், இந்தியாவில் அரசுக்கு தெரியாமல் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ கொக்கைன் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 55 கிலோ கொக்கைன் மற்றும் 200 கிலோ மெத்தம்படமைன் போதைப்பொருள்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. […]
