தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் ஒப்புதல் இல்லாமல் பாஜகவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அஜித் பவாரின் சட்டப்பேரவைக் குழு தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று பாஜக, தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரும், சரத் பவாரின் மருமகனுமாகிய அஜித் பவார் தான் ஆட்சியமைக்க பாஜகவுக்கு உதவியுள்ளார். இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது […]
