“மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி”, ஆகயால் மக்களை கண்ணியமாக நடத்துங்கள் என அதிகாரிகளுக்கு ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் அறிவுரை வழங்கினார். ஒடிசாவில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் அமைச்சர்கள், கலெக்டர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட 2 நாள் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய முதல்-மந்திரி நவீன் பட்நாயக்,“மக்களே ஜனநாயகத்தின் உயிர்நாடி. காவல் நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள் அனைத்துமே அவர்களுக்காகத்தான் செயல்படுகிறது. இங்கு வேலை செய்பவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள்தான் ஊதியம் கொடுக்கிறார்கள். எனவே மக்களே உண்மையான […]
