Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் காலை…இரவு…. தண்ணீர் இப்படி குடிச்சு பாருங்க….. அப்புறம் அசத்தலான மாற்றம்… ஆரோக்கிய வாழ்வு தான்….!!

குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடுபடுத்திய தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவது தான் உடலுக்கு மிக ஆரோக்கியமானது என வீட்டில் பெரியோர் சொல்ல கேட்டிருப்போம். அந்தவகையில் வெந்நீர் குடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்,  வெந்நீர்  குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.  முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது.  தினமும் காலையிலும், இரவு நேரத்திலும் வெதுவெதுப்பான நீரை குடிக்கும் பழக்கம் உடலிலிருந்து நச்சுகள் மற்றும் அசுத்தங்களை வெளியேற்ற உதவுகிறது.  முகத்தின் வயதான தோற்றத்தைப் போக்கி சருமத்தின் பிரகாசத்தை அதிகரிக்கிறது. 

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் சோர்வா….? பலவீனமா இருக்கீங்களா….? இதை அதிகம் சாப்பிடுங்க…!!

நாடு முழுவதும் ஊரடங்கில்  பல்வேறு தளர்வுகள்  ஏற்படுத்தப்பட்டதையடுத்து அனைத்து பணிகளும் இயல்பாக நடைபெற தொடங்கிவிட்டன. இத்தனை நாட்களாக வீட்டிற்குள் முடங்கிக் கிடந்த மக்கள் வெளியே செல்லத் தொடங்கி விட்டனர். இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடர்ச்சியாக பணிக்கு செல்வதால் பலர் உடல் சோர்வாக இருப்பதை போன்ற உணர்ச்சியை பெறுகிறார்கள். நீங்கள் இப்படியான சோர்வை உணர்கிறீர்களா ? அப்படி என்றால், இந்த செய்தி தொகுப்பு உங்களுக்கு தான். நமது உடலில் இரும்புச்சத்து ஹீமோகுளோபினின் முக்கிய அங்கமாக இருக்கும். அது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மழைக்கால பிரச்சனை” 10 நிமிட வேலை தான்…. மிஸ் பண்ணாம செய்தால் இந்த வேதனை இருக்காது…!!

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழைக் காலங்களில் நுண்ணுயிர் தாக்குதல்களான  சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். ஆனால் இதைவிட பெரிய பிரச்சனை சேற்றுப்புண் பிரச்சனை தான். மழைக்காலம் வந்தாலே இந்த பிரச்சனை பலருக்கு வந்து விடும். கால்களில் சேற்றுப்புண் வருமுன் தடுப்பது நல்லது. வந்த பின்னும் உடனடியாக அதற்கான மருத்துவத்தை பார்த்துவிட வேண்டும். இல்லையெனில் நாள் செல்லச்செல்ல பெரிய பிரச்சனையை உண்டாக்கிவிடும். சேற்றுப்புண் வராமல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ரூ10 – ரூ80 க்குள்ள தான்…. வாங்கி போட்டு பாருங்க…. எலும்பு பிரச்சனை இல்லாம வாழுங்க…..!!

உலகின் பிற இனங்களை ஒப்பிடுகையில், தமிழின மக்கள் உணவு, உடை உள்ளிட்டவற்றில்  பாரம்பரியத்துடன் சிறந்து விளங்கியதோடு, அணிகலன் அணியும் அற்புதமான பாரம்பரியத்தையும் கொண்டிருந்தனர். தமிழர்கள் அணிகலன்களை வெறும் அழகுக்காக மட்டும் அணியாமல், ஒவ்வொரு இடத்திலும் நாம் அணியக்கூடிய அணிகலன்களும் தர கூடிய  ஒரு மருத்துவ குணத்தை சொல்லிக் கொடுத்தும்  சென்றிருக்கிறார்கள். அதில், ஒன்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தமிழர்களின் பாரம்பரியங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது செம்பு. இப்போதும் கூட பலர் செம்பு காப்பு, மோதிரங்களை பயன்படுத்துகிறார்கள். செம்பு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சாஃப்ட் ஆன சருமம் வேண்டுமா….? இது இருக்கும் போது….. காஸ்ட்லி பொருள்கள் எதற்கு….?

முக அழகை பராமரிப்பதற்கான ஒரு சிறிய டிப்ஸ் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இன்றைய காலகட்டத்தில் தங்களது அழகை பராமரித்து கொள்வதற்காக பலர் அதிகமாக செலவு செய்து வருகிறார்கள். அழகை பராமரிப்பதற்காக விலை உயர்ந்த பொருட்களையும் வாங்கி பயன்படுத்தும் பழக்கம் தற்போது பெருகி வருகிறது. ஆனால் இயற்கை முறையிலேயே நமது அழகை சிறப்பாக பராமரிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவது தான் இந்த செய்தி தொகுப்பு. அதன்படி, தக்காளியை  துண்டாக நறுக்கி முகத்தில் தேய்த்து, 5 […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

காரம் தான்….. ஆனால் இது தெரிஞ்சா இனி ஒதுக்க மாட்டீங்க….. பச்சை மிளகாயின் மருத்துவ குணம்….!!

பச்சை மிளகாயின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  பச்சை மிளகாய் பொதுவாக தமிழக உணவு பொருட்களில் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய ஒன்று. இது சுவைக்கும், காரத்துக்கும் அதிகம் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் பச்சை மிளகாயில், பல சத்துக்கள் நிறைந்துள்ளது பலருக்கும் தெரியாது. பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி இரும்புச்சத்தை கிரகித்துக் கொள்ள உதவுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்கவும், ரத்த ஓட்டத்திற்கும் உதவுகிறது. மேலும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உமிழ்நீர் அதிகம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

டீ பிரியரா நீங்கள்…..? அப்ப இத மட்டும் சேர்த்துக்கோங்க…. ஆரோக்கியம் அமோகமா இருக்கும்….!!

தேநீரில் மேற்கொண்டு  மருத்துவ குணம் அதிகரிப்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  இந்தியாவின் தேசிய பானம் என்று அழைக்கப்படும் தேனீர் பெரும்பாலான இந்தியர்களால் விரும்பப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், இந்த தேநீர் வித்தியாசமான முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீரில், பல வகைகளும் உண்டு. தமிழகத்தில் மருத்துவ குணம் நிறைந்த ஸ்பெஷல் டீ  என்றால் அது இஞ்சி டீ  உள்ளிட்டவை தான். இதனுடன் மற்றொரு ஒரு பொருளையும் டீயுடன் சேர்த்துக்கொண்டால் என்ன நன்மை என்பது குறித்து இனி காண்போம், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஹச் ஹச்சுனு தும்ப தேவையில்லை…. தொடர் தும்மல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வு….!!

தொடர் தும்மல்  பிரச்சனையை போக்குவதற்கான மருத்துவ குறிப்பு குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா காலகட்டத்தில் சாதாரண இருமல், தும்மல் என்றாலும், நம்மை நெருங்கியவர்கள் கூட நம்மை விட்டு பயத்துடன் சற்று விலகி நிற்கிறார்கள். அது சாதாரண தும்மல் தான் என்பது நமக்கு தெரிந்தாலும், இது சகஜம் என்று நாம் உணர்ந்தாலும் பிறருக்கு அது பயத்தை, அசௌகரியமான நிலையை கொடுக்கிறது. அதேபோல், கொரோனா காலகட்டம் மட்டுமல்லாமல், பிற காலகட்டங்களிலும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

செய்ய மறந்த செயல்….. 1 நாளுக்கு 3 தடவை செய்தால் போதும்…. 40% நோயை கட்டுப்படுத்தும்…..!!

உப்பின் மருத்துவ குணம் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நம் வீட்டில் இருக்கக்கூடிய சமைப்பதற்கு பயன்படும் உணவுப் பொருட்கள் அனைத்திலும், ஒரு மருத்துவ குணம் அடங்கியிருக்கும். இது நம் தமிழ் பாரம்பரிய உணவின் சிறப்பு. மஞ்சளுக்கு மருத்துவ குணம்  இருப்பதை போலவே, நாள்தோறும் உணவில் சேர்த்து வர கூடிய உப்பிலும் மருத்துவ குணம் அடங்கியுள்ளது. ஒரு நாளைக்கு 3 தடவை உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரை கொப்பளித்து வந்தால் மேல் சுவாச மண்டலத்தில் ஏற்படும் நோய்த் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தலைவலி….. இருமல்….. மூச்சு திணறல்….. 3 பிரச்சனைக்கும் ஒரே தீர்வு….!!

வெற்றிலையின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  அடிக்கடி தலை வலிக்கிறதா? கவலை வேண்டாம் இரண்டு வெற்றிலைகளை கசக்கி சாறாக  எடுத்து அதில், கற்பூரத்தைச் சேர்த்துக் குழைத்து வலி இருக்கும் இடத்தில் தடவுங்கள் தலைவலி முற்றிலுமாக காணாமல் போய்விடும். முற்றிய வெற்றிலை சாற்றில் இரண்டு மிளகு, சிறிதளவு சுக்கு சேர்த்து தேனோடு கலந்து சாப்பிட்டு வர, மூச்சு திணறல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.  அதேபோல், வெற்றிலையில் இரண்டு மிளகுகளை வைத்து மட்டும் சாப்பிட்டு வந்தால், தீராத […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தூக்கத்தை தொலைக்கிறதா நெஞ்செரிச்சல்…? வாரம் 2 முறை….. இதை சாப்பிட்டால் போதும்…!!

லவங்கத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  லவங்கத்தில் மாங்கனீஸ், இரும்பு, கால்சியம் மற்றும் தாதுஉப்புக்கள் நிரம்பியுள்ளன. இவை ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலையும், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. தினமும் காலை, மாலை அரை தேக்கரண்டி லவங்க பொடியுடன், ஒரு தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் நாள்பட்ட மூட்டுவலி குணமாகும். வாரம் இருமுறை லவங்கம் சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு, நெஞ்சு எரிச்சல் ஏற்படாது. இன்றைய காலகட்டத்தில், மன உளைச்சலால், பலர் தூக்கத்தை தொலைத்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இனி பயம் வேண்டாம்….. இதை குடிங்க….. இருமலை மறங்க….!!

இருமலை குணமாக்குவதற்கான சிறு மருத்துவ  குறிப்பு ஒன்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போதைய சூழ்நிலைக்கு இருமல் வந்தாலே அருகில் உள்ளவர்கள் நம்மிடமிருந்து நாலடி விலகி நிற்கிறார்கள். நாமும் நம் அருகில் இருப்பவர் இரும்பினால் சற்று பயத்தோடு விலகி நிற்போம். அப்படியான கால கட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அப்படி இருக்க, நாமும் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருப்பது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் மிகமிக நல்லது. இருமலுக்கு சிறந்த தீர்வு சுக்கு பால் செய்து கொடுப்பதே. நன்றாக காய்ச்சிய […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

கொய்யா பழத்தில்….. இதுதான் முக்கியம்….. அந்த சத்தை நீக்கிடாதீங்க….!!

கொய்யா பழத்தில் இருக்கக்கூடிய மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  கொய்யா இலையை காய்ச்சி வாயை கொப்பளித்தால் ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும். கஷாயம் செய்து குடித்தால் தொண்டை, வயிறு மற்றும் இதய நோய்களை குணமாக்கும்.  குழந்தைகள் உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யா பழத்தின் தோலில் அதிகம் சத்து உள்ளதால், தோலை நீக்கிவிட்டு சாப்பிடக்கூடாது.  இதில் விட்டமின் சி சத்து இருப்பதால் கொய்யாப்பழம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தோல் பிரச்சனைக்கு தீர்வு….. இதுக்கு தான் மருதாணி வச்சாங்களா….? அசத்தல் மருத்துவ குணங்கள்….!!

மருதாணியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  தமிழர்கள் பொதுவாக அனைத்து விஷயங்களிலும் ஒரு மருத்துவ குணத்தையும் அல்லது ஏதேனும் காரணத்தையும் உள்ளடக்கி இருப்பார்கள். அந்தவகையில், நாம் அனைவருமே தெரிந்திருக்க கூடிய ஒரு விஷயம் மருதாணி. கைகளில் அலங்காரம் செய்வதற்காக இந்த இலையை நாம் உபயோகிக்கிறோம்.  சிலருக்கு மருதாணி வைத்தால் சளி பிடிக்கும். இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மருதாணி இலைகளை அரைக்கும் போது கூடவே ஏழு அல்லது எட்டு நொச்சி இலைகளை சேர்த்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதற்கு மாத்திரை, மருந்தா…? இதை செய்தால் போதும்….. நிமிஷத்தில் குணமாகும்….!!

காலை தலைவலியை நீக்குவதற்கான வழிமுறைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். காலையில் எழுந்தவுடன் இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோர் சந்திக்கக்கூடிய பிரச்சனையாக தலைவலி இருந்து வருகிறது. இந்த தலைவலியை எதிர்கொள்ள பலர் மாத்திரை, மருந்துகளை நாள்தோறும் எடுத்து வருகின்றனர். சிலருக்கு சாதாரண இஞ்சி  டீ உள்ளிட்டவற்றை குடித்தால் தலைவலி சரியாகும். மாத்திரை, மருந்துகளை காலையில் வரும் தலைவலிக்காக நாள்தோறும் எடுத்துக் கொண்டிருந்தால், அது எதிர்காலத்தில் உடலில் மேலும் சில பாதிப்புகளை ஏற்படுத்திவிடும். காலையில் எழுந்தவுடன் ஏற்படும் தலைவலியை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முன்னோர் வைத்தியம் : நீர் கடுப்பு பிரச்சனையா….. விதையை அரைத்து பூசுங்க….!!

வெள்ளரிக்காயின் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நீர்சத்து அதிகம் காணப்படும் பழங்களில் வெள்ளரிப்பழமும் ஒன்று. நீர்சத்து அதிகமாக இருப்பதன் காரணமாகவே, கோடை காலங்களில் இது அதிகமாக விற்பனையாகும். கோடை காலங்களில் இதனை அதிக அளவில் சாப்பிட்டு வந்தால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அந்த வகையில், வெள்ளரி பழத்தை அரைத்து பால் சர்கரை சேர்த்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும். வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம் பெறும். வெள்ளரிக்காய் விதைகளை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பாரம்பரியம் தான் பெஸ்ட்….. சின்ன அலட்சியத்தால் 5,00,000 உயிரிழப்பு….. இனி இதை செய்யாதீங்க….!!

ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரைகள் செயல்படுவது குறித்து பிரபல யூட்யூப் சேனல் LMES ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது அது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக காண்போம்.  பொதுவாக மனிதனின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையாகவே நமக்கு கிடைக்கப் பெற்ற அற்புதமான ஒன்று. இதனை பேணி பாதுகாத்தால் மட்டுமே நமது வாழ்நாள் நீடிக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியானது நமது உடலுக்குள் வரக்கூடிய பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை எதிர்த்துப் போராடக் கூடியது. ஒருமுறை நமது உடலில் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கேரட் OIL….. தலைமுடி வளர்ச்சிக்கும், அடர்த்திக்கும்…. “பெஸ்ட் கண்டிஷனர்”

கேரட் எண்ணெயின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கேரட் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் பீட்டா கரோட்டின் சத்து தலை முடிக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. தற்போது பல இளைய தலைமுறையினர் சந்திக்கும் ஒரு பிரச்சனை, முடி சேதமும் அதனால் ஏற்படும் முடி முடி உதிர்வு பிரச்சனையும் தான். இந்த கேரட் எண்ணெய் கூந்தல் மற்றும் உச்சந்தலையில் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. இது கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிப்பதுடன், முடியின் அடர்த்தியையும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

60 வயதிலும்….. துடிப்பு… இளமையை அள்ளித்தரும்…. அற்புத பானம்…!!

60 வயதை தாண்டிய போதிலும் துடிப்புடனும், இளமையுடனும் செயல்பட வைக்கக்கூடிய பானம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இந்த காலகட்டத்தில் வயது 40ஐ தாண்டும் பட்சத்திலேயே பலரால் வயதானவர்கள் போல அனைத்து வேலைகளையும் துடிப்புடன் செய்ய முடிவதில்லை. வயதான தோற்றம் முகத்தில் காட்டிக் கொடுத்து விடுகிறது. இந்த பிரச்சனை எல்லாம் நீங்க,  ஒரு மூடி துருவிய தேங்காய் மற்றும் நறுக்கிய 2 நெல்லிக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு தண்ணீர் விட்டு நன்றாக அரைக்கவும். பின் முழு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மனநிலை பிரச்சனை…. வராமல் தடுக்க….. தினமும் ஒரு கப் தயிர்….!!

மனநிலை குறித்த பிரச்சனையை சரிசெய்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். இன்று பெரும்பாலானோர் அவதிப்படும் ஒரு பிரச்சனை என்றால் அது மனநலம் குறித்த பிரச்சனை தான்.  வேலைகளில் இருக்கக்கூடிய சுமை, வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனை ஆகியவற்றை மனதில் வைத்து நினைத்துக் கொண்டே இருப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த மனநிலை என்பது நமது உணவுகளை பொருத்தும் அமைகிறது . அந்த வகையில் தயிர் போன்ற புரோபயோடிக் உணவுகளை சாப்பிடுவதால் குடல் பகுதியில் உள்ள […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கல்லீரல் வீக்கம்…. சிறுநீரக தடை…. இரண்டையும் சரி செய்யனுமா….. ஒரு கப் சூப் போதும்….!!

மணத்தக்காளியின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மணத்தக்காளி மிகுந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு கீரை. இதன் இலையிலிருந்து சாரை பிழிந்து எடுத்து அதில் சிறிதளவு இந்துப்பு போட்டு வாரம் இருமுறை குடித்து வர கீழ் வாயு மற்றும் சிறுநீர் தடை நீங்கும். மேலும் இந்த இலையை நன்கு வெயிலில் காய வைத்து பின் வெந்நீரில் ஊற வைத்தும் சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வருவதன் மூலம் கல்லீரல் மண்ணீரலில் உள்ள வீக்கம் குறையும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதையா வேணாம்னு சொன்னோம்….. கெட்ட கொழுப்பிற்கு எமன்….. இனி தயவு செய்து ஒதுக்காதீங்க…!!

கருவேப்பிலையின் மருத்துவ குணம் குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கருவேப்பிலை பெரும்பாலானோரும் உணவில் அதிகம் சேர்க்க கூடிய ஒன்றாகும். சமையலில் கறிவேப்பிலை இல்லாமல் இருக்கவே இருக்காது. ஆனால் கருவேப்பிலையை சிறியவர் முதல் பெரியவர் வரை ஒரு கசப்பு பொருளாக பார்த்து ஒதுக்கி விடுகின்றனர். ஆனால் கருவேப்பிலை இரத்த சோகையை குணப் படுத்துகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் மூல நோய் சிகிச்சைக்கு உகந்த சீரான ரத்த ஓட்டத்திற்கும் வழிவகுக்கிறது. கல்லீரலை பாதுகாப்பது கெட்ட கொழுப்பினை குறைக்க உதவுகிறது. ஆகவே […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வயிற்று வலி பிரச்சனையா….? சிறியோர் முதல் பெரியோர் வரை….. அனைவருக்கும் ஏற்ற அருமருந்து…!!

வயிற்று வலியை நீக்குவதற்கான மருத்துவ பொருள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சமையலில் தவிர்க்க முடியாத ஒன்று வெந்தயம்.  ஆனாலும் கூட பலருக்கும் அதன் முக்கியத்துவம் தெரிவதில்லை. சாப்பாட்டின் போது அதை ஒதுக்கி விடுகிறார்கள். கிராமங்களில் உள்ள பெரியவர்கள் பிள்ளைகளுக்கு வயிற்று வலி வந்தால் உடனே வெந்தயத்தை வாயில் போட்டு மென்று மோர் குடிக்கச் சொல்வார்கள். வயிற்று வலி நீங்குவதுடன் உடல் புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். 

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்க வீட்டுக்கு பக்கத்துல….. இது இருந்தா ரொம்ப நல்லது…. சின்ன இடம் கிடைச்சாலும் விதைச்சிடுங்க….!!

மணத்தக்காளியின் மருத்துவ குணங்கள் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். மணதக்காளி ஓர் அற்புத மருத்துவம் கொண்ட கீரை .100 கிராம் கீரையில் 82 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது. கோடைகாலத்தில் மணத்தக்காளிக் கீரையை தினமும் எடுத்துக் கொள்ளுவதால் உடல் சூடு உள்ளிட்ட பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும். இந்த கீரை புற்றுநோயை வராமல் தடுப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதை தினசரி பயன்படுத்த மணத்தக்காளி கீரை கூட்டு, சூப் தயாரித்து உண்ணலாம். குறிப்பாக சூப்பை மிதமான சூட்டில் அருந்தினால் தொண்டைக்கு […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வைட்டமின் “c “ன் இராணி… இதயம் பலம் பெறும் கொய்யாவின் நன்மைகள்..!!

நம் உடலுக்கு வைட்டமின் C அளிக்க கூடிய, இதயத்திற்கு பலம் அளிக்கக்கூடிய இயற்கையின் இராணி கொய்யாவின் நன்மைகள் பற்றி அறிவோம்..! வெள்ளை, சிவப்பு மற்றும் சற்று நீண்ட வகை கொய்யா பழங்கள் உள்ளன. அனைத்து வகைகளிலும் ஒரே வகையான சத்துக்களே அடங்கியுள்ளன. இது காய் பருவத்தில் பச்சை நிறத்திலும் நன்கு பழுத்த நிலையில் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். இப்பழத்தில் பல வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்து காணப்படுகின்றன. நெல்லிக்கனிக்கு அடுத்து அதிக வைட்டமின் சி இப்பழத்தில் உள்ளது இதனால் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“கானா வாழை” ஆண்மை குறைவு….. உடல் பலமின்மை….. இரண்டிற்கும் சிறந்த தீர்வு….!!

கானா வாழையின் மருத்துவகுணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். கானாவாழை இதனை  பெரும்பாலும் கிராமபுறத்தில் வாழும் மக்கள் அறிந்திருப்பர். ஆனால் நகர்ப்புறங்களில் வாழ்வோருக்கு இது பற்றி தெரியாது. கானா வாழை  பொதுவாக ஈரமான பகுதிகளில் தானாகவே வளரக்கூடியது. சிறப்பான தாம்பத்தியத்துக்கு பெரிதும் உதவக்கூடியது கானா வாழை. கானா வாழையுடன் முருங்கைப் பூ, துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து கூட்டு வைத்து கொள்ளுங்கள். பின் நெய் கலந்த சாதத்தோடு  கூட்டு சேர்த்து 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“உணவே மருந்து” இனி மாத்திரை வாங்காதீங்க…. இதை சாப்பிடுங்க….!!

ஒரு சில காய்கறிகள் மற்றும் பழங்களின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். கீரை வகைகளில் நாம் அரிதாக கேட்கும் பெயர் பசலைக் கீரை. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பும் அன்னாச்சி பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. பீட்ரூட் இரத்த சோகையை நீக்கும் தன்மை கொண்டது. வல்லாரைக்கீரை ஞாபக சக்தியை கொடுக்க கூடியது. மேலும் உடலுக்கு பல்வேறு சக்திகளை வழங்குகிறது. மாம்பழம் உண்டால் இருதயம் வலிமை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மாதவிடாய் வலி” குறைய…. சிறந்த டிப்ஸ்…. உங்க வீட்டு பெண்களுக்கு சொல்லுங்க….!!

பாதத்தில் மசாஜ் செய்வதால் ஏற்படும் மருத்துவ பயன்கள் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். கொரோனா பாதிப்பால்  144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் இருக்கின்றனர். இக்காலகட்டங்களில் மக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருப்பதால், 24 மணி நேரமும் டிவி பார்ப்பது,  மொபைல் நோண்ட , விளையாட என நேரத்தை ஏதாவது ஒரு விதத்தில் செலவிட வேண்டும். அப்படி செலவிட்டால் தான் போர் அடிக்காமல் இருக்கும். இம்மாதிரியான கால கட்டங்களில் நாம் நமது  உடல் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலசிக்கல் பிரச்சனையா….? கணைய வீக்கமா…? ஒரே ஒரு பப்பாளி…. 2 பிரச்சனையும் காலி….!!

பப்பாளியின் மருத்துவப் பயன்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  பப்பாளி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. அதில் ஒரு சிலவற்றை பின்வருமாறு காணலாம். பப்பாளி நல்ல மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கல், வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாக விளங்குகிறது. மேலும் பித்தத்தைப் போக்கி உடலுக்கு தெம்பூட்டும் சக்தி பப்பாளிக்கு உண்டு. இதயம் மற்றும் கல்லீரலுக்கு மிகவும் ஏற்றது பப்பாளி. இது மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும். கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும். சிறுநீர்க கோளாறுகளைத் தீர்க்கவும் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

3 பொருள்…. 3 நிமிடத்தில் சரியாகும்…. அஜீரண கோளாறு….!!

அஜீரண கோளாறை சரி செய்வது எப்படி  என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  இக்காலகட்டத்தில் பலரும் அவதிப்படும் ஒரு உடல் பிரச்சனை என்றால் அது அஜீரண தொல்லை தான். உணவு செரிமான பிரச்சனையால் அஜீரணம் என்பது அனைத்து வயதினருக்கும் வரும். அதிகாரம் என்னை போன்றவற்றை உண்ணும் போது செரிமான நீர் சுரப்பதில் பிரச்னை ஏற்படும். இதை எளிய வழியில் குணமாக்க ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து சூடு தணிந்தவுடன் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

4 விதமான…. உடல் பிரச்சனைகளுக்கு மருந்தாகும்….. 4 காய்கறி…..!!

சில காய்கறிகளின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.  முட்டைக்கோஸ் சாறு அருந்தி வந்தால் வயிற்றுப்புண் நீங்கும்.  தக்காளி சாறுடன் தேன் கலந்து அருந்தினால் ரத்தம் சுத்தமாகும்.  கத்தரிக்காய் பசியைத்தூண்டும் ரத்தத்தை தூய்மையாக்கும். 

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தேநீர் பிரியர்களா நீங்கள்….. தயார் செய்யும் முன்….. இதெல்லாம் கூட சேர்த்துக்கோங்க….!!

தேநீர் பிரியர்கள் அதை தயார் செய்யும் முன் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தேநீர் பிரியர்கள் தேநீர் தயாரிக்கும் போது இஞ்சி, சீரகம், ஏலக்காய், மஞ்சள், கிராம்பு ஆகியவற்றை ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதன்படி, சீரகம் மலச்சிக்கல் அஜீரணம் போன்றவற்றை சரிசெய்யும். ஏலக்காய் வயிற்று வலி, வயிறு இழுத்து பிடித்தல் ஆகியவற்றை தடுக்கும். மஞ்சள் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தாயின் வாசம்…. கருவறை பாதுகாப்பு…. மருத்துவம் குணம் வாய்ந்த தொட்டில் பழக்கம்…!!

தொட்டிலின் மருத்துவ குணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். பிறந்த குழந்தையை சேலை தொட்டிலில் இடுவது நமது கலாச்சாரத்தின் முக்கியமான ஒன்று. முன்னொருகாலத்தில் இதனை விழாவாகவே தமிழர்கள் கொண்டாடி வந்தனர். இந்த சேலை தொட்டிலில் விடுவதற்கு என அறிவியல் உண்மை ஒன்று இருக்கிறது. இதை உணராமல் இத்தகைய அருமையான கலாச்சாரத்தை நாம் மறந்து வருகிறோம். அது என்னவென்றால், பிறந்த குழந்தைக்கு புதிய உலகத்தின் பயம் வராமல் இருக்க, தாயின் வாசமுள்ள சேலை, அதனுடைய கதகதப்பு போன்றவை […]

Categories
இயற்கை மருத்துவம் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஓரு டம்ளர் சாறுல….. இவ்ளோ நன்மையா….. நீங்களும் ட்ரை பண்ணுங்க….!!

பீட்ருட் சாறின் மருத்துவம் குணம் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.  பீட்ரூட் துண்டு ஒன்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பின் ஓரளவு பொடிப்பொடியாக நறுக்கி பின் அதனை மிக்ஸியில் போட்டு அடித்து அதனுடைய சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளவேண்டும். பீட்ரூட் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் நீங்கும். பீட்ரூட் சாறு சாப்பிட்டால் பித்தம் காரணமாக உண்டாகும் குமட்டல் வாந்தி நிற்கும். பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து ரத்த சிவப்பணுக்களை புதுப்பிக்கும். நரம்புகள் வலுப்படும். இதனுடன் அவரைக்காய் […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடல் சூடு தனிய….. ரத்தம் அதிகரிக்க….. எதிர்ப்பு சக்தி பெருக….. ஒரே ஒரு டம்ளர் நெல்லி சாறு…!!

நெல்லிக்கனியின் மருத்துவ குணம் குறித்து  இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். நெல்லிக்காய் பொதுவாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கூறுவார்கள். தற்போது அதிகரித்துவரும் இந்த சூழ்நிலையில் கூட நெல்லிக்கனியை மக்கள் எடுத்துக் கொண்டால் அது ரத்த உற்பத்தி அதிகரிப்பதோடு எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, நெல்லிக்காய் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் உடல் எடை படிப்படியாக குறையும். சாற்றில் தேன் கலந்து குடிக்கும் போது இரத்தமானது சுத்தமாகும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பொடுகு தொல்லையா…. ரூ10குள்ள சுலபமா நீக்கிடலாம்…… ஒரு துண்டு போதும்….!!

இஞ்சியை கொண்டு எப்படி பொடுகினை முற்றிலுமாக நீக்குவது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.  இஞ்சி பொதுவாக மருத்துவம் குணம் கொண்டது. இதை நாம் நாள்தோறும் எடுத்துக் கொள்ளும் டீ அல்லது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.  இது தவிர கூடுதல் நல்ல விஷயங்களையும் நமக்கு அளிக்கிறது.அந்த வகையில், இஞ்சி எடுத்து பொடியாக வெட்டி தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் அடுப்பை எரிய விட்டு தண்ணீரின் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆக…. கண் எரிச்சல்…. பார்வை…. உடல்சூடு…. 3 க்கும் ஒரே தீர்வு….!!

வெள்ளரிக்காய் மருத்துவம் குணம் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். வெள்ளரிக்காய் உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது. கண் பார்வை குறைபாட்டை தவிர்க்க தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்லது. கண்ணில் எரிச்சல் ஏற்படும் போது வெள்ளரித் துண்டுகளை நறுக்கிப் கண்ணில் வைத்தால் எரிச்சல் நீங்கும். தயிருடன் வெள்ளரிக்காய் சாற்றை நன்கு கலந்து முகத்தில் பூசி வர முகம் பொலிவு தரும்.

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி கொட்டுதா…..? ஆவாரம் பூ…. செம்பருத்தி…. தேங்காய்பால்….. இத பண்ணாலே போதும்….!!

முடி கொட்டுவதை தடுப்பதற்கான ஒரு சிறந்த மருத்துவ குறிப்பை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். முடி கொட்டுவதை தடுப்பதற்காக பலர் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் ஊட்டச்சத்து குறைபாட்டால் முடி கொட்டுபவர்களுக்கு  அதை தடுக்க வழிவகை உண்டு. ஆனால் ஜீன் அடிப்படையில் அதாவது தந்தை, தாத்தா இவர்களுக்கு முடி கொட்டி இருப்பின் அவர்கள் ஜீன் வழி வந்த மகனுக்கும் அது தொடரத்தான் செய்யும் அதற்கு மாற்று கண்டுபிடிப்பது என்பது சற்று சிரமமான காரியம். இதில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இத்தனை நாள் இது தெரியாம போச்சே….. 6 நிமிட வேலை….. கேன்சருக்கு மருந்தாகும் வெள்ளை பூடு…..!!

வெள்ளை பூடுகளை வறுத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். வெள்ளைப்பூண்டு 6 எடுத்துக்கொண்டு அதன் மேல் தோலை உரித்து பின் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் உரித்த வெள்ளை பூண்டுகளை போட்டு நன்கு வறுக்க வேண்டும். பின்  வருத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் எவ்வளவு அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் சரி ஒரு மணி நேரத்தில் செரிமானம் ஆகி வயிற்றை தூய்மைப்படுத்தி விடும். அதேபோல நான்கிலிருந்து ஆறு […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வாழைப்பழம்  பிரியர்களா  நீங்கள் ..?  இப்படி சாப்பிட்டால்  உங்களுக்கு  ஆபத்து..!   

பொதுவாக,  மக்கள் மிகவும் விரும்பும்  பழம் வாழைப்பழமாகும், இது பல மருத்துவ குணங்கள் நிறைந்தது மற்றும் நமது பட்ஜெட்டில் கிடைக்கும். இரும்பு, டிரிப்டோபான், வைட்டமின்-பி 6, வைட்டமின்-பி போன்ற பண்புகள் இருப்பதால் மக்கள் ஒவ்வொரு நாளும் வாழைப்பழங்களை சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் கவனமாக இருங்கள், ஏனெனில் இந்த சத்தான வாழைப்பழமும் உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். ஆம், ஒரு நாளில் அதிக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிக வாழைப்பழங்களை சாப்பிடுவது உங்களை எவ்வாறு […]

Categories

Tech |