மாநிலத்திற்கே சோறிட்ட டெல்டா மக்கள் இரண்டு துண்டு ரொட்டிகளுக்காக வாகனத்தின் பின்னால் ஓடிவந்த காட்சியெல்லாம் வரலாற்றில் அப்பியிருக்கும் அழிக்க முடியாத சோகம். கடந்த வருடம் இதே தேதி இந்நேரம் அந்த புயல் கரையை கடந்துவிட்டது. சோறுடைத்த சோழநாடு என்று பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் கஜா என்னும் அரக்க புயல் தனது அசுரக் கரங்களால் அலசிப் போட்டுவிட்டது. வயல்வெளிகள், தென்னந் தோப்புகள் என அனைத்தும் சின்னாபின்னமாகின. கால்நடைகள் கொத்துக் கொத்தாக சரிந்து விழ, வீட்டு ரேஷன் […]
