உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கனேரி மலை கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் தனது வீட்டில் உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தேவேந்திரன் என்பவர் வீட்டில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அவரின் வீட்டின் பின்புறத்தில் உரிமம் இல்லாமல் […]
