தேர்தல் நடைமுறையை அதிக சக்திவாய்ந்ததாகவும், அனைவரும் பங்கேற்க கூடிய வகையிலும் உருவாக்கியதற்காக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக இந்த தினம் தேசிய வாக்காளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று ஜனவரி 25 ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக தேர்தல் ஆணையம் அனுசரிக்கிறது. இதையொட்டி பிரதமர் மோடி […]
