பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு கண்டிப்பாக செயல்படுத்தப்படாது என்று முதலமைச்சர் நிதீஷ்குமார் பிகார் சட்டப்பேரவையில் உறுதியளித்துள்ளார். பிகார் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை செயல்படுத்துவது குறித்து எந்தக் கேள்வியும் இல்லை என்று கூறிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பிரதமர் நரேந்திர மோடி இது குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார் என்றார். இது குறித்து பிகார் சட்டப்பேரவையில் பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார், “பிகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த எந்தக் கேள்வியும் இல்லை. அது அஸ்ஸாம் மாநிலத்திற்கு […]