66ஆவது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை வழங்குகிறார். திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு ஆண்டுதோறும் தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வானவர்களின் பெயர் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை குஜராத்தி மொழித் திரைப்படமான ஹெல்லாரோவுக்கு அறிவிக்கப்பட்டது. அதே போன்று உரி திரைப்படத்தில் நடித்த விக்கி […]
