அரசுமுறை பயணமாக ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்குச் சென்றிருந்த இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தாயகம் திரும்பினார். பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் அழைப்பின் பேரில் கடந்த 17ஆம் தேதி அந்நாட்டிற்கு அரசுமுறை பயணமாக இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்றிருந்தார். அங்கு தலைநகர் மணிலாவில் உள்ள கல்லூரி ஒன்றில் மகாத்மா காந்தி கல்வி நிலையத்தை திறந்துவைத்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, சுற்றுலா, அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளின் […]
