மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்பி குலாம் நபி ஆசாத்தை பிரதமர் மோடி புகழ்ந்து பேசிய போது கண்கலங்கினார். காங்கிரஸின் மாநிலங்களவை தலைவரான குலாம் நபி ஆசாத் பதவி காலம் இந்த கூட்டத்தோரோடு முடிவடைகிறது. அவருடன் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 3 எம்பிகளின் பதவி காலம் முடிவடைகிறது. அவர்கள் 4 பேருக்கும் பிரியாவிடை கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி அவையில் பேசினார். அப்போது குலாம்நபி ஆசாத் காஷ்மீரில் இருந்த போது குஜராத்தை சேர்ந்த சில சுற்றுலா பயணிகள் தீவிரவாதிகளிடம் சிக்கி […]
