நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பேசப்படும் நிலையில் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினர் முன்பாக ஆலோசனை கூட்டத்தில் கே எஸ் அழகிரி பேசி வருகிறார். நாங்குநேரியில் ஏற்கனவே சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் இதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் […]
