நங்காஞ்சியாறு அணையிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தாலுகாவில் நங்காஞ்சியாறு அணை உள்ளது. இந்த அணையின் மொத்த உயரம் 39.37 அடியாகும். இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் திண்டுக்கல் மற்றும் கரூரில் பல பகுதிகள் பாசன வசதி பெற உதவுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழையால் அணை நிரம்பி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பாசன வசதிக்காக நீரை திறந்து விடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்பேரில் நங்காஞ்சியாறு அணையில் […]
