பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் பாஜக_வின் தேர்தல் பிரசாரத்தை வெளியீடு வந்த நமோ தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் உருவத்தை லோகோவாக கொண்ட நமோ டிவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு தன்னுடைய ஒளிபரப்பை தொடங்கியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டதுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரும் கொடுக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் மற்றும் அரசியல் குறித்த பல்வேறு விஷயங்கள் 24 மணி நேரமும் […]
