பெண்கள் காவலன் செயலியை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட கண்காணிப்பாளர் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர நேரங்களில் பெண்கள், முதியோர் ஆகியோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழ்நாடு காவல் துறை ‘காவலன் SOS’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது. ‘காவலன் SOS’ பயன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விளம்பரப் பதாகைகளும் […]
