மர்ம நபர் மோசடி செய்த பணத்தை அதிகாரிகள் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சாமு தம்பி மரைக்காயர் தெருவில் செய்யது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2021-ஆம் ஆண்டு வங்கியிலிருந்து செய்யதின் அலைபேசிக்கு அழைப்பு வந்ததாக தெரிகிறது. அதில் பேசிய நபர் செய்யத்தின் ஏ.டி.எம்.கார்டை முடக்க போவதாகவும், அதனை சரிசெய்ய ஓ.டி.பி. எண்ணை தெரிவிக்கும்படியும் கூறியுள்ளார். இதனை நம்பிய செய்யது அவருடைய அலைபேசிக்கு வந்த ஓ.டி.பி. எண்ணை தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவரது வங்கிக் கணக்கிலிருந்த […]
