கட்டிடம் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோடியக்காடு கிராமத்தில் கூலி தொழிலாளியான காளிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோடியக்காட்டிலுள்ள ஊராட்சிக்கு சொந்தமான பழைய குடியிருப்பு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த சுவர் இடிந்து அவர் மீது விழுந்துள்ளது. அதில் காளிதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளிதாசன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
