நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அறுவடைக்கு தயாராக இருந்த காலிஃப்ளவரை விவசாயி ஒருவர் ஆடுகளுக்கு விருந்தாக்கினார். கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹுன்சூர் (Hunsur) அருகே இருக்கும் ஹம்மிகே கிராமத்தைச் சேர்ந்தவர் தம்மன் கவுடா. இவருக்குச் சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காலிஃபிளவர் பயிரிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது, காலிஃப்ளவர் நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாரானது. ஆனால் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது […]
