மர்ம விலங்கு கடித்து 3 ஆடுகள் இறந்ததால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் அருகே இருக்கும் அம்பேத்கர் நகரில் விவசாயியான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி என்ற மனைவி உள்ளார். இவர் பகல் நேரத்தில் தனது தோட்டத்து பகுதியில் கால்நடைகளை மேய்த்து விட்டு இரவு அங்கிருக்கும் பட்டியில் அடைப்பது வழக்கம். நேற்று முன்தினம் சங்கர் வெளியூர் சென்றுவிட்டதால் தமிழரசி கால்நடைகளை இரவு நேரத்தில் பட்டியில் அடைத்து விட்டு ஊருக்குள் […]
