இயக்குநர் மிஷ்கின் தன்னை ஒரு குழந்தைப்போல பெற்றுக்கொண்டதாக நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் சைக்கோ. மிஷ்கின் இயக்கியுள்ள இப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு பெற்று திரையரங்கத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது.இதையடுத்து இதைக் கொண்டாடும்விதமாக, சைக்கோ படத்தின் சக்சஸ் மீட் நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகை நித்யா மேனன், “சைக்கோ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தால் மகிழ்ச்சி அடைவேன். நல்ல கதையம்சம் […]
