மூதாட்டியிடம் முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள மாதாகோவில் தெருவில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் வீட்டிற்கு அடையாளம் தெரியாத 2 நபர்கள் வந்து தங்களுக்கு முதியோர் உதவித்தொகை வாங்கி தருகிறோம் எனக் கூறி முன்பணமாக 4,000 ரூபாய் செலுத்த வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். இதனை நம்பிய கொளஞ்சி தன்னிடமிருந்த 1000 ரூபாய் மற்றும் முக்கால் பவுன் நகையை அவர்களிடம் […]
