திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு கட்டாயம் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு கடுமையாக கடந்த மாதம் வரை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், முக்கிய தளர்வாக கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 60 நாட்களுக்கும் மேலாக கோவில்களில் கடவுளை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் […]
