தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு காவடி எடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து விட்டு சென்றனர். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் முருகருக்கு தங்கவேல் மற்றும் தங்க கவசம் போன்றவை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. அப்போது தங்களது நேர்த்தி கடனை செலுத்தும் வண்ணம் பக்தர்கள் காவடி எடுத்து கோவிலை வலம்வந்தனர். இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு […]
