திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு சென்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடத்தப்படும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டமானது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. எனவே அதிகாரிகளை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் அளிப்பதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவதை தடுப்பதற்காக […]
