காந்தி படுகொலையால் அதிகம் பயனடைந்தவர் நேரு எனக் கூறி அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என பாஜக சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான சிம்லாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக மூத்தத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டார். காந்தி படுகொலை குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய அவர், “காந்தி படுகொலைக்குப் பின் நடத்தப்பட்ட விசாரணையில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்ட பின் 40 நிமிடங்கள் வரை […]
