பரோட்டாவுக்கு கூடுதல் குருமா கேட்ட காரணத்தால் தி.மு.க நிர்வாகி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள முத்து கவுண்டன் புதூர் பகுதியில் ஆரோக்கியராஜ் என்ற பெயிண்டர் வசித்து வந்துள்ளார். இவர் முத்து கவுண்டன் புதூர் பகுதியில் தி.மு.க கிளை தலைவராக பதவி வகித்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இரவு நேரத்தில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்த ஆரோக்கியராஜ், மனைவி மற்றும் குழந்தைகள் கேட்ட காரணத்திற்காக பரோட்டா வாங்குவதற்காக அருகில் […]
