வாலிபரின் தலையை அறுத்து கொலை செய்துவிட்டு சகோதரர்கள் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியிலிருக்கும் புலித்தேவர் நகரைச் சார்ந்தவர் சிதம்பர செல்வம். இவர் கூலி வேலை செய்து வந்தார். சிதம்பர செல்வம் அவரது உறவினரான பாலாஜி மற்றும் அவரது தம்பி ராமையா அனைவரும் ஒன்றாக மது அருந்துவது உண்டு. அவ்வாறு மது அருந்திக்கொண்டிருக்கும் போது பாலாஜியின் மனைவியை சிதம்பரம் செல்வம் தவறாக பேசியதுதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. […]
