நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் மெக்கானிக்கான ஜோதிஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதிஷுக்கும், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வந்தனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு லதீஷ் என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் ஜோதிஷுக்கு வந்தனாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோபமடைந்த ஜோதிஷ் […]
