அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து வருமுன் காப்போம் திட்டம் முகாம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழையனூர் பகுதியில் இருக்கும் அரசு மேல்நிலைப் பள்ளியில் யூனியன் தலைவர் சின்னையா தலைமையில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்டம் முகாம் நடைபெற்றுள்ளது. இதற்கு ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்துள்ளார். அதன்பின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு வரவேற்புரை ஆற்றியுள்ளார். இதனை அடுத்து வருமுன் காப்போம் திட்டம் மருத்துவ முகாமை திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் […]
